Tuesday, 27 October 2009

கணவன் - மனைவி: நகைச்சுவைகள்.


மனைவி:ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னுபொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச்சொன்னான்!!

--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியேஅதான் புடிச்சுருக்கு

--------------------------------------------------------------------------------
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனாயாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம்என்னோட போகட்டும்...

--------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்...
எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்கஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்உனக்குத்தானே...!

--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரேஅவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரைகல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சேஅவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு. கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தைஇத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான்ஆச்சர்யமா இருக்கு.

--------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

--------------------------------------------------------------------------------
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால்
அதற்குமூன்று காரணங்களே இருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.

---------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...இந்தாங்க தூக்க மாத்திரை மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு

---------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான் கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா... வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னைபிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
---------------------------------------------------------------------------------
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
 

!

No comments:

Post a Comment

Funny Pictures