Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, 15 November 2011






மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.

முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.

வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

Monday, 25 April 2011

Jokes for u

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

6) மூன்று மொக்கைகள்: a) நைட்’ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்’ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage’லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ‘ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது?….

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?…..

12) ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி – 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

13) மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…
கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு…
5. இதெல்லாம் பொய்’ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி….
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி….

17) தத்துவம் 2010
“லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!
“கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்’ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்….

18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்’ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க… எல்லா “நாளும்” ஒரே மாதிரி இருக்கா?………..
Next மீட் பண்றேன்…

Friday, 18 February 2011

Tamil Jokes for u 15


> No : 1

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

> No : 2 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

* * * * * * * * * * * * * * * * * *

> No: 3

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

> No : 4 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..!

தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

> No : 5 ( Exam ஆரம்பிக்கும் முன்...)

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

* * * * * * * * * * * * * *

No: 6

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

****************************

Tamil Jokes for u 14


> No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

> No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

> No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

> No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

> No : 5

நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

Friday, 21 January 2011

Tamil Jokes for u 13

போர்க்களத்தில் கொசுவலை:

நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....

நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?

ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?

நண்பர்: ..............


*****

ஒரு சின்ன கதை .
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு .
சிங்கம் இன்ஜினியரிங் படிக்குது .
புலி MBBS படிக்குது .
குரங்கு இத படிக்குது .
இது எப்படி இருக்கு ?

*****

படிக்கத் தெரியாத வாண்டு:
அம்மா: மணி, என்ன எழுதறே?
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!

*****


Monday, 27 September 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"



அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்

வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.

அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல

இருந்தே செய்யணும்.

இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய

தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-, இங்கிலாந்து- இருக்குற Bank,

இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.

எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க

பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants.....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு

எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்

இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள

முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.

இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு

ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய50

நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்

முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க

புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்

தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,

எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே

"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க

வேலை பார்த்துட்டோம்.

இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு

சொல்லுவோம்.

இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.

இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.

இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்

தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்

ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.

எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.

நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை

எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு

நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா

வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?

நான் கடைசியா சொன்னேன் பாருங்க....

டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"

சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி

தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?

அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது

இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,

கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?

புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.

சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,

அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு

இருக்கும்.

Funny Pictures