Friday, 9 October 2009
மிஸ்டர்.மொக்கை ஜோக்
மொக்கையும், தண்டபாணியும் மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்தார்கள். ஒருநாள் (தண்ட)பாணி, தவறுதலாக சுழலும் வாளுக்குள் கையை விட்டுவிட்டான். கை துண்டானது. மொக்கை உடனடியாக, ஒரு பாலிதீன் கவரில் வெட்டுண்ட கையைப் போட்டு, பாணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மறுநாள் பாணியைப் பார்க்க போனபோது, அவன் படுக்கையில் இல்லை. மொக்கை செவிலியிடம் விசாரித்தார். "தோட்டத்தில் பூப்பறிச்சுகிட்டு இருக்கார்" என்று செவிலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாணி உள்ளே பூக்கூடையுடன் வந்தான். வெட்டுண்ட கை சரியாக ஒட்டியிருந்தது. மறுநாளே பணிக்குத் திரும்பிய பாணி, கவனக்குறைவாக காலை ரம்பத்துக்குள் விட்டுவிட்டான். மொக்கை முன்போலவே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மறுநாள் போனபோது, பாணி மூன்றாவது மாடிக்கு ஒரு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்தார். மீண்டும் வேலைக்கு வந்த பாணி, இம்முறை தலையை வெட்டிக்கொண்டுவிட,மீண்டும் மொக்கை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மறுநாள் பார்ப்பதற்காக போனார். பாணி படுக்கையில் இல்லை. செவிலியிடம் மொக்கை கேட்டார்.. "எங்கே என் நண்பன் பாணி..? கல் சுமக்க போயிருக்கிறானா..? "இல்லே.. செத்து பூட்டான்..!' "அய்யோ.. எப்படி..?" "நேத்து அவன் தலையை எவனோ ஒரு முட்டாள் பாலிதீன் பையில் சுற்றி எடுத்து வந்திருக்கிறான்.. வரும்போதே மூச்சுத் திணறி செத்துப் போயிட்டான் போல..!"
Subscribe to:
Post Comments (Atom)
-
Aug. 15, 1947: Mountbatten swears Nehru in as Prime Minister of India TRAIN TO PAKISTAN ; India 1947. Trains packed with refugees - Hindus ...
-
KOVAI -Yenunga good nightnga! TIRUNELVELI - elay goodnightla MADURAI - makka good nightya CHENNAI - inna mamu good nightma UNGA baashai - oh...
-
அகத்தினழகு முகத்தில் தெரியும் அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு....
No comments:
Post a Comment