“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.”
- ஜவஹர்லால் நேரு.
“நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”
- குசும்பன்
***
வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!
***
வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…
***
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
வடிவேல் : ?!?!
***
அண்ணே…
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?
***
ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
No comments:
Post a Comment