Saturday, 7 November 2009

ந‌ண்ப‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.

ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.

கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.

சோமு - ராமு : ?!?!?!?!?!?

************************************************************

எங்க அப்பா ரொம்ப ஏழை டா ம‌ச்சா‌ன்.

அப்படியா?

ஆமா‌ன்டா சமயத்துல அவரோட 2 காருக்கும் பெட்ரோல் போட கூட அவ‌ர்‌கி‌ட்ட காசு இருக்காது தெ‌ரியுமா?

************************************************************

ஜா‌னி, நே‌த்து ஸ்பென்சர் பிளாசால வசமா மாட்டிக்கிட்டேன்டா.

எ‌ப்படிடா?

கரண்ட் கட் ஆயிடுச்சி எஸ்கலேட்டர்ல மாட்டிக்கிட்டேன்.

************************************************************

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

************************************************************

டே‌ய் ந‌ம்ம கூ‌ட்ட‌த்‌தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!

ஏன்டா? எ‌ன்னடா ப‌ண்ணா‌ன்?

ஒழு‌ங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.

************************************************************

ஏ‌ன்டா எ‌ப்படா உ‌ன் க‌ல்யாண‌ம்?

காத‌ல் க‌ல்யாண‌ம் ப‌ண்‌ணி‌‌க்‌கி‌ட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு காத‌லியோடா அப்பா மிரட்டறாருடா

ந‌ண்ப‌ன் : க‌ல்யாண‌த்து‌க்கு தடையா இருந்தா கொலை பண்ணிடுவேன்னு ‌நீ ‌மிர‌ட்டு

************************************************************

ம‌ணி : என் லவர் சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்.

சேகர‌் : இதென்ன பெரிசு என் லவர் சிரிச்சா பல்லே விழும்.

************************************************************

டே‌ய் என‌க்கு ஒரு ச‌ந்தேகமுடா...

சொ‌ல்லு ‌‌தீ‌ர்‌த்து வை‌க்‌கிறேன‌்.

முத‌ல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்னடா நடந்து இரு‌க்கு‌ம்?

ஒருவருக்கு பயங்கரமா "ஷாக்" அடிச்சிருக்கு‌ம்

உ‌ன்‌ட்டா போ‌ய் கே‌ட்டே‌ன் பாரு

************************************************************

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றது ரொம்ப சரிடா ம‌ச்சா‌ன்

எ‌‌ப்போ‌த்ல இரு‌ந்து இ‌ந்த ஞானோதய‌ம்?

கல்யாணம் ஆனதும் மனைவி குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே, அத‌‌ச் சொ‌ன்னே‌ன்டா.

************************************************************

உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற. மொத்தம் உ‌ன் ‌கி‌ட்ட எ‌வ்வளவு டா இரு‌க்கு‌ம்?

ஒரு ரூபா இருக்கும்.

டே‌ய் உன‌க்கு கணக்கு தெரியாது‌ன்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.

உ‌ன‌க்கு‌த்தா‌ன் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா

***********************************************************

ந‌ம்ம ரமே‌ஷ‌் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?

ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா?

ஊஹும் நான் கேட்டேன். இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்.

************************************************************

பூக்காரி பொண்ண கட்டினது பெ‌ரிய த‌ப்புடா

ஏன்டா அ‌ப்படி சொ‌‌ல்ற?

தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.
************************************************************

No comments:

Post a Comment

Funny Pictures