ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன்
அப்படி என்ன கவலை?
நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.
-----------------------------------------------------------------------------------------------
தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபிஸ் லியா, வீட்டிலியா....?
-----------------------------------------------------------------------------------------------
அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?
மழை நின்று விட்டதா என்று பார்க்க.
-----------------------------------------------------------------------------------------------
நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே
அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.
-----------------------------------------------------------------------------------------------
யாருமே அழமட்டேங்கிறாங்க
அதுக்காக சாவு வீட்டுல டி.வி. நாடகம் போட்டு விடறதா?
-----------------------------------------------------------------------------------------------
என் பூட்டை உடைத்து 5 லட்சம் திருடிட்டு போயிட்டாங்க.
பூட்டுக்குள்ளே எப்படியா 5 லட்சம் வச்சிருந்தே?
-----------------------------------------------------------------------------------------------
கோழி ஏன் முட்டை போடுது?
அதுக்கு 1,2,3, தெரியாது
அதான் முட்டை போடுது!
-----------------------------------------------------------------------------------------------
குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?
தெரியைலேய?
குளிக்கும் போதே துவட்ட முடியாதே---------------------------------------------------------------------------------------------------
பிரிட்ஜில் தக்காளி வைக்கிறாங்க, ஏன்?
தக்காளியில் பிரிட்ஜை வைக்க முடியாது
---------------------------------------------------------------------------------------------------
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.......
---------------------------------------------------------------------------------------------------
உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?
மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்
அப்படி நீ படிச்சா கிடைக்காதா?
---------------------------------------------------------------------------------------------------------------
இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்
---------------------------------------------------------------------------------------------------------------
பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!
---------------------------------------------------------------------------------------------------------------
டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?
அதை அடமானம் வைக்க முடியாதே
---------------------------------------------------------------------------------------------------------------
நாய் ஏன் குரைக்குது?
அதுக்கு கூட்டத் தெரியாது.
நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்?
அதுல பல சிக்கல்கள் இருக்கு...
---------------------------------------------------------------------------------------------------------------
நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்?
அதுல பல சிக்கல்கள் இருக்கு...
-----------------------------------------------------------------------------------------
எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்
----------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?
எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------
எங்க வீடு கோயில் மாதிரி....
அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் வைக்கணுமா?
-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
என்னாச்சி?
போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
------------------------------------------------------------------------------------------------------------
வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா..
-------------------------------------------------------------------------------------------------------------
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.
-------------------------------------------------------------------------------------------------------------
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா
---------------------------------------------------------------------------------------------------------------
நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்
------------------------------------------------------------------------------------------------------------
உங்க வீடு எங்கே இருக்கு ஸார்?
அடமான பேங்க்ல இருக்கு ஸார்.
-----------------------------------------------------------------------------------------------------------
நான் நீச்சல் கத்துக்கேறன்
எங்கே...?
தண்ணியிலதான்...!
அப்படி என்ன வேலை செய்றாரு?
தண்ணீர் லாரி வச்சிருக்காரு