போர்க்களத்தில் கொசுவலை:

நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....

நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?

ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?

நண்பர்: ..............


*****

ஒரு சின்ன கதை .
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு .
சிங்கம் இன்ஜினியரிங் படிக்குது .
புலி MBBS படிக்குது .
குரங்கு இத படிக்குது .
இது எப்படி இருக்கு ?

*****

படிக்கத் தெரியாத வாண்டு:
அம்மா: மணி, என்ன எழுதறே?
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!

*****