“சாட்சி சொல்லும் போது,
நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?”
”நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு
பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.”!

***

“பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே
தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!

***

உன் பையன் ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிட்டானு டாக்டர்கிட்ட போனியே என்ன ஆச்சு?

ஒரு ரூபாயை எடுக்க, அவர் 1000 ரூபாயை முழுங்கிட்டார்.

***

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்.

***

மன்னர்: என் மூளையை பயன்படுத்தி நான் செய்துள்ள இந்த சிலையைப் பார்த்தீர்களா அமைச்சரே?

அமைச்சர்: அட! 'களிமண்'ணில் இவ்வளவு அழகான சிலையா மன்னா!

***

இரண்டு நாய்கள் மிகத் தீவிரமாக விவாதித்துக் கொன்டிருந்தன..


நாய் 1: லொள்..லொள்..

நாய் 2 : லொள்..லொள்..

நாய் 1: லொள்..லொள்..

நாய் 2 : வள்..வள்..வள்..

நாய் 1: இரு.. இப்போ எதுக்கு பேச்சை மாத்தறே..?

***